/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் இல்ல திருமண விழாஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் இல்ல திருமண விழா
ஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் இல்ல திருமண விழா
ஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் இல்ல திருமண விழா
ஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் இல்ல திருமண விழா
ADDED : ஜன 28, 2024 04:29 AM

புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர், ஆர்.கே.டி., நிறுவனத் தலைவர் ராஜகோபால் இல்ல திருமண விழா, புதுச்சேரி அடுத்த திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, தமிழ் மாநில காங்., தலைவர் வாசன் பங்கேற்று மணமக்கள் அரவிந்த்-கவுசிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், கல்யாணசுந்தரம், ரமேஷ், வைத்தியநாதன், பாஸ்கர், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர்கள் சபாபதி, சிவக்கொழுந்து, முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஜெயபால், தமிழ்ச்செல்வம், கோபிகா, சோமசுந்தரம், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன், மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் நாராயணசாமிகேசவன், பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தினர்.
வள்ளிக்கொடி நிறுவனத் தலைவர் ஜெயக்குமார், ஆர்.கே.டி., நிறுவனம் ராஜா, சத்யா, ஆனந்தன், கே.கே. குரூப்ஸ் குமார், தொழில் அதிபர்கள் என்.ஆர்.காங்., பிரமுகர் ராஜா, பாரிஸ் மாஷா அலி, பெஸ்டோ பேக்கேஜிங் பிரைவேட் லிட்., நிறுவனர் சேகர், ஸ்கைசாட் சம்பத், வானுார் ஒன்றிய தலைவர் உஷாமுரளி, பூத்துறை ஊராட்சி தலைவர் சேகர், பத்திர எழுத்தாளர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை மணமக்கள் குடும்பத்தினர் ராஜகோபால் - லட்சுமி, வடிவழகன் - பரமேஸ்வரி வரவேற்று, நன்றி கூறினர்.