ADDED : ஜூன் 11, 2026 07:27 AM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி வி.சி., சார்பில், சாலை மறியல் போராட்டம், திருக்கனுார் கடை வீதியில் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது.
வி.சி., மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் எழில்மாறன், தொகுதி செயலாளர் சிவசங்கர், மாநில செய்தி தொடர்பாளர் சிவச்சந்திரன், தொகுதி பொருளாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை கைவிட வேண்டும். சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர். சாலை மறியல் காரணமாக திருக்கனுார் கடைவீதியில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமா ர், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
