/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டம்: கடற்கரை சாலையில் கண்காட்சிக்கு ஏற்பாடுபுதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டம்: கடற்கரை சாலையில் கண்காட்சிக்கு ஏற்பாடு
புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டம்: கடற்கரை சாலையில் கண்காட்சிக்கு ஏற்பாடு
புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டம்: கடற்கரை சாலையில் கண்காட்சிக்கு ஏற்பாடு
புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டம்: கடற்கரை சாலையில் கண்காட்சிக்கு ஏற்பாடு

என்ன சிறப்பு
கண்காட்சியில் ஸ்மார்ட் சிட்டி, தொலை தொடர்பு, ஐ.ஓ.டி., சைபர், டேட்டா பாதுகாப்பு, கல்வி, விவசாயம், வாகன போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதிக்காத சுற்றுலா, டீப் டெக் என தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அசத்தலான கண்டுபிடிப்புகளில் முத்திரை பதித்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனஙகள் கலந்துகொள்கின்றன.
விவசாய புரட்சி
ட்ரோன் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளையும், துரித சேவைகளையும் அளித்து வருகிறது. விவசாயத்தில் ட்ரோன் சேவையை புரட்சி ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் ட்ரோன்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்வெளி குப்பைகள்
மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், அதன் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகளாக சுற்றி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் விண்வெளிக் குப்பைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


