/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சிஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 11, 2024 02:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெகா அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவின் தலைமை மேலாளர் திருமாவளவன் துவக்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில் மழலையர் பிரிவு, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என, மொத்தம் 1,500 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
மின்சாரம, இயற்பியல் வகைப்பாடு, காற்று மாசுபாடு, தனிம அட்டவணை, நீரின் மின்னாற்பகுப்பு, திட, திரவ, வாயு நிலை, நியூட்டன் தொட்டில் முறை, விசை வகைள், தானியங்கி தெரு விளக்கு, செயற்கைக்கோள் செயல்பாடுகள், ஊசித் துளை புகைப்பட கருவி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றிருந்த அறிவியல் படைப்புகள் அனைவரையும் கவர்ந்தன.
மேலும் மழை நீர் சேகரிப்பு, புவி வெப்பமயமாதல், காற்றாலை, எரிமலை, ஜே.சி.பி., டான்சிங் பால், அமில மழை போன்ற படைப்புகளின் அடிப்படை அறிவியல் விளக்கப்பட்டன. ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தினதியாகு முன்னிலையில் சிறந்த படைப்புகள் வகுப்பு வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.