ADDED : நவ 30, 2025 05:43 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் உள்ள செல்வகணபதி எம்.பி., அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில், செல்வகணபதி எம்.பி., லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 பேருக்கு இலவசமாக மின்சார தையல் இயந்திரம், 3 பேருக்கு தள்ளு வண்டி, 25 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை, பா. ஜ., முன்னாள் ஓ.பி.சி., அணி மாநில தலைவர் நடராஜன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., தொகுதி தலைவர் பன்னீர் செல்வம், தொகுதி பொறுப் பாளர்கள் ஆறுமுகம், தயாளன், செந்தில், பாலன் கோபு, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





