/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஹைதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஹைதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது
புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஹைதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது
புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஹைதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது
புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஹைதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது
ADDED : செப் 14, 2025 01:50 AM

புதுச்சேரி, : புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹோப் செவன் மினி கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக ஹைதராபாத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கன்டெய்னர் டெலிவரி சேவைக்காக 'குளோபல் லாஜிஸ்டிக்' நிறுவனத்தின் 'ஹோப்செவன்' கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெயினர்களை ஏற்றி வந்து, உப்பளம் துறைமுகத்தில் வாரத்தில் இரண்டு முறை டெலிவரி செய்யும் பணியில் சில நாட்கள் மட்டும் ஈடுபட்டது.
இந்நிலையில் திடீரென கண்டெய்னர் டெலிவரி சேவை நிறுத்தப்பட்டு, ஹோப்செவன் கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டது. கப்பலின் நிறுவனத்திற்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை மற்றும் கப்பலில் ஏற்பட்ட இயந்திர பழுது காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உப்பளம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது கப்பல் நிறுவனத்தின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கப்பலில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக ைஹதராபாத் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த இரு இழுவை கப்பல்கள் மூலம், நேற்று இரவு உப்பளம் துறைமுகத்தில் இருந்து ைஹதராபாத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.