Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டாஞ்சாவடி கமிட்டியில் சாக்குபைகள் பற்றக்குறை விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

தட்டாஞ்சாவடி கமிட்டியில் சாக்குபைகள் பற்றக்குறை விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

தட்டாஞ்சாவடி கமிட்டியில் சாக்குபைகள் பற்றக்குறை விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

தட்டாஞ்சாவடி கமிட்டியில் சாக்குபைகள் பற்றக்குறை விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

ADDED : ஜன 30, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
புதுச்சேர : தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் சாக்குபைகள் பற்றக்குறையை கண்டித்து விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப்பகுதிகளான கிளியனுார், மரக்காணம், வானுார், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை தட்டாஞ்சாவடியில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குடியரசு தினம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் இயங்கிய தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு பொன்னி, பி.பி.டி.37,90,39, பொன்மணி 9, உள்பட 9 அரிசி ரகங்களை கொண்ட 900க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் நேற்று அதிகாலையே வந்து குவிந்து விட்டன.கமிட்டிக்கு வந்த நெல்மூட்டைகளில் சிலவற்றை மட்டுமே எடை போட்ட கமிட்டி தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்ட மூட்டைகளை சாக்குபைகள் பற்றக்குறையால் எடைப்போடாமல் 11 மணி வரை நிறுத்திவைத்திருந்தனர். மேலும் சாக்குபைகளில் 2024ம் ஆண்டு சீல் போடுவதற்கு சீலும் தயாராகாமல் இருந்தது. இதனால் கோபமான விவசாயிகள் கமிட்டி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.அதை தொடர்ந்து வேறு கமிட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட சாக்குபைகளில் நெல் நிரப்பப்பட்டு 12 மணியளவில் எடைப்போடப்பட்டன.இதனால் கமிட்டியில் பரப்பரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us