/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர் சந்தையில் பாம்பு மக்கள் அலறி அடித்து ஓட்டம் உழவர் சந்தையில் பாம்பு மக்கள் அலறி அடித்து ஓட்டம்
உழவர் சந்தையில் பாம்பு மக்கள் அலறி அடித்து ஓட்டம்
உழவர் சந்தையில் பாம்பு மக்கள் அலறி அடித்து ஓட்டம்
உழவர் சந்தையில் பாம்பு மக்கள் அலறி அடித்து ஓட்டம்
ADDED : ஜூன் 02, 2025 10:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி உழவர் சந்தையில் நல்லபாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, பழைய பஸ் நிலையம் பின்புறத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு 37 ம் எண் கடையில், வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி, மதியம் ஒரு மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டு காய்கறிகளை ட்ரேவில் அடுக்க சென்றார். அப்போது, ட்ரேவில் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்ததை கண்டு கூச்சலிட்டார்.
இதனால், உழவர் சந்தையில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அங்கு வந்த வேளாண் அலுவலர் ஹரிதாஸ், பாம்பு இருப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன் மற்றும் வேலாயுதம் ஆகியோர் விரைந்து சென்று, உழவர் சந்தை கடைக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீள நல்லபாம்பை, லாவகமாக பிடித்து, பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.