/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகாராஷ்டிரா முதல்வருடன் சபாநாயகர் செல்வம் சந்திப்பு மகாராஷ்டிரா முதல்வருடன் சபாநாயகர் செல்வம் சந்திப்பு
மகாராஷ்டிரா முதல்வருடன் சபாநாயகர் செல்வம் சந்திப்பு
மகாராஷ்டிரா முதல்வருடன் சபாநாயகர் செல்வம் சந்திப்பு
மகாராஷ்டிரா முதல்வருடன் சபாநாயகர் செல்வம் சந்திப்பு
ADDED : மார் 19, 2025 06:53 AM

புதுச்சேரி : மும்பை சென்றுள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்சை சந்தித்து பேசினார்.
சந்திப்பில் இந்திய சுதந்திர பவள விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையில் நாடு முழுதும் 101 இடங்களில் தியாகிகளின் பெயர் பொறித்த தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 இடங்களில் அமையப்பட உள்ள தியாகப் பெருஞ்சுவர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் சக்ரா பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ராஜசேகரன், புதுச்சேரி மாநில பா.ஜ., இளைஞரணி செயலாளர் வருண் உடனிருந்தனர்.