ADDED : மே 11, 2025 04:04 AM

புதுச்சேரி: சாரம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷம் சிறப்பு பூஜை நடந்தது.
சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, புதுச்சேரி சாரம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் தையல்நாயகி சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், கோவில் சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர்.