தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி


ADDED : நவ 20, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மாற்றுத்திறனாளர்கள் தினத்தையொட்டி, இந்திராகாந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி விளையாட்டு போட்டி நடக்கிறது.

இது குறித்து, சமூக நலத்துறை இயக்குநர் ராகினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்று திறனாளர்கள் தினம் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலச் சங்கங்களின் ஆலோசனை கூட்டம், சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. அதில், இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி, இந்திரா காந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us