மாநில செஸ் போட்டி பரிசளிப்பு விழா
மாநில செஸ் போட்டி பரிசளிப்பு விழா
மாநில செஸ் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : செப் 10, 2025 11:25 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில செஸ் சங்கம் சார்பில், 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
முத்தியால்பேட்டை, ஆறுமுக கல்யாண மண்டபத்தில் நடந்த போட்டிகளில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, சங்கத் தலைவர் சங்கர் வரவேற்றார். விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.
இதில், முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், செஸ் சங்கச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.