Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை

ADDED : அக் 02, 2025 01:49 AM


Google News
புதுச்சேரி: அரசு மருத்துவக் கல்லுாரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை உயர்த்திட சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு;

ம த்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் 2026-27 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 550 மருத்துவ இடங்களை அதிகரித்து தரவும், புதிதாக மாநில மற்றும் மத்திய அரசால் துவங்கப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 5, 550 மருத்துவ இடங்களை உருவாக்க மத்தி ய அரசு முடிவு எடுத்துள்ளது.

அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் 6,000 இடங்களை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்கட்டமைப்பு வசதியும், போதிய பேராசிரியர்களும் உள்ளனர்.

ஆகையால், வரும் 2026-27 கல்வியாண்டில், பிரதமரின் மருத்துவ படிப்பில் புதிய திட்டத்தின்படி, அரசு மருத்துவ கல்லுாரியின் இடங்களை 180ல் இருந்து 250 ஆக உயர்த்த சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் உரிய முயற்சிகள் எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us