/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் அருகே லாரி மோதி மாணவர் பலி உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு வில்லியனுார் அருகே லாரி மோதி மாணவர் பலி உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
வில்லியனுார் அருகே லாரி மோதி மாணவர் பலி உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
வில்லியனுார் அருகே லாரி மோதி மாணவர் பலி உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
வில்லியனுார் அருகே லாரி மோதி மாணவர் பலி உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 26, 2025 04:48 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே லாரி மோதி கல்லுாரி மாணவர் இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் மகன் கவிஷ், 19; மூலகுளம் கிரிஸ்ட் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்தார். இவர், நேற்று காலை 9:30 மணியளவில், உடன் படிக்கும் பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் அபிேஷக், 19, என்பவருடன் யமாஹா பைக்கில் கல்லுாரிக்கு பத்துக்கண்ணு - வில்லியனுார் சாலை வழியாக சென்றார்.
கூடப்பாக்கம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி,பைக் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி கவிஷ், இடது பக்கமாக லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அபிேஷக் வலது பக்கமாக விழுந்ததால் ஒருகாலில் அடிப்பட்டு மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் தப்பியோடினார். ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் லாரியை அடித்து சேதப்படுத்தினர்.
கவிஷின் உறவினர்கள் அவரது உடலை பத்துக்கண்ணு சதுக்கம் பகுதியில் வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு பகுதி சப் கலெக்டர் குமரன், தாசில்தார் சேகர், போலீஸ் எஸ்.பி., சுப்ரமணியன்,இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்தை நடத்தினர்.
அதில், இறந்த கவிஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காலை நேரத்தில் பள்ளி கல்லுாரி மாணவர்கள் பாதிக்காமல் இருக்க 10:00 மணி வரையில் இவ்வழியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
சப் கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்று மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் பத்துக்கண்ணு - வில்லியனுார் சாலையில் 9:30 முதல் மதியம் 12:30 வரை மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு மாணவர் பலி லாஸ்பேட்டை, நாவற் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவாசன் மகன் அர்ஜூனன், 18; மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் கல்லுாரி சென்ற அவர், மாலை 5:00 மணியளவில் கல்லுாரி பஸ்சில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அரியூர் பகுதியில் வந்தபோது பஸ்சின் பின்பக்க கதவு திடீரென, திறந்துகொண்டது.கதவு பகுதியில் நின்று வந்த அர்ஜூனன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.பின் தொடர்ந்து வந்த,அதே கல்லுாரி பஸ்சின் சக்கரம்,அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் அர்ஜூனன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.