/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'காரைக்கால் கலெக்டரை வழியனுப்பிய மாணவர்கள்''காரைக்கால் கலெக்டரை வழியனுப்பிய மாணவர்கள்'
'காரைக்கால் கலெக்டரை வழியனுப்பிய மாணவர்கள்'
'காரைக்கால் கலெக்டரை வழியனுப்பிய மாணவர்கள்'
'காரைக்கால் கலெக்டரை வழியனுப்பிய மாணவர்கள்'
ADDED : பிப் 11, 2024 02:17 AM

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் சமீபத்தில் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர், காரைக்கால் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திடீர் இடமாற்றத்தால் காரைக்கால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தார். கல்வித்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில், தினம் ஒரு அரசுப் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ரேஷன் அட்டை, இலவச மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டார். இவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே பெரியபேட் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் சூர்யா தலைமையில், கலெக்டர் குலோத்துங்கனை சந்திந்து பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர். உடன் ஆசிரியர்கள் இருந்தனர்.
அப்போது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கூடுதல் வகுப்பறை கட்டி கொடுத்ததற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். அதற்கு, நீங்கள் நன்றாக படிக்கவேண்டும் என, மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ் செய்தார். அப்போது மாணவர்கள் கண்கலங்கியது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.