ADDED : டிச 01, 2025 05:30 AM
புதுச்சேரி: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, தனியார் எலக்ட்ரிக் பஸ், இ.சி.ஆர்., வழியாக நேற்று காலை 7:50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. மடுவுபேட் அருகே வந்தபோது, பஸ்சில் இருந்து திடீரென புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தினார்.
பதட்டமடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து, கிழே இறங்கினர். தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு படையினர் வந்தனர். பஸ்சை சோதனை செய்த போது, மின் கசிவினால் புகை வந்தது தெரிந்தது. பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் பழுதுபார்க்கப்பட்டு, பின், புறப்பட்டது.


