/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை இளம்பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை
இளம்பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை
இளம்பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை
இளம்பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை
ADDED : மே 11, 2025 11:32 PM
புதுச்சேரி: மூலக்குளம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜோசப் ஹரியாதாஸ், 26; தனியார் நிதி நிறுவன ஊழியர்.இவருக்கும், வேல்ராம்பட்டை சேர்ந்த பிரியா, 21; என்பவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு ஏப்., மாதம் திருமணம் நடந்தது.
ஜோசப் ஹரியாதாசிற்கு அதிக கடன் பிரச்னை இருந்ததால், திருமணத்தின்போது பிரியா அணிந்து வந்த நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து செலவு செய்துள்ளார்.அடிக்கடி பிரியாவை அவரது வீட்டிற்கு அனுப்பி பணம் வாங்கி வருமாறு தொந்தரவு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்த பிரியா வெறும் கழுத்துடன் இருந்ததால், அவரது தாய் கார்மேல் மேரி, தனது தாலி செயினை கொடுத்து அணிந்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதனையும் ஜோசப் ஹரியாதாஸ் அடமானம் வைத்து விட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் (10ம் தேதி) தனது உறவினருடன் திருமண அழைப்பிதழ் வழங்க, பிரியா வீட்டிற்கு கார்மேல் மேரி சென்றார். அப்போது, பிரியாவின் கழுத்தில் தான் கொடுத்த தாலி செயின் இல்லாததால் எங்கே எனகேட்டார். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் அன்று இரவு துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருமணம் நடந்து ஓராண்டே ஆவதால் தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.