/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்' டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10வது, பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 21, 2025 07:18 AM

புதுச்சேரி : சேதராப்பட்டு டாஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.
இது குறித்து பள்ளி முதல்வர் செல்வராஜ் கூறியதாவது;
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு நகர்புற பள்ளிகளுக்கு இணையாக தரமான கல்வி அளித்து வரும் எமது பள்ளி, பொதுத்தேர்வுகளில் தொடர் சாதனை படைத்து வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய 82 பேரும், பிளஸ் 2வில் தேர்வு எழுதிய 78 பேரும் தேர்ச்சிபெற்று சாதனை படைத்தனர்.
பிளஸ் 2 மாணவி ஜெயபாரதி 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் ஹரிஸ்குமார் 583 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி மதுமிதா 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பில் மேரி இவான்ஜலின் ஜெனித்தா 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், அனுஷவர்ஷினி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி ேஹமபிரதா மற்றும் மாணவர் ஹிதேஷ்மஹதோ ஆகியோர் தலா 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பிளஸ் 1 தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றனர். வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றி' என்றார்.