Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்

ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்

ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்

ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்

ADDED : ஜன 27, 2024 06:26 AM


Google News
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோர் நலன் கருதி ஆலங்குப்பம், அரசு ஆரம்ப பள்ளியில் வரி வசூல் சிறப்பு முகாம் நாளை 28ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலங்குப்பம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி, குடிநீர் கட்டணம் நிலுவைதாரர்கள் 2023-24ம் ஆண்டிற்கான வரியை செலுத்தலாம்.

இன்றும் நாளையும் வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து நடக்கும். உழவர்கரை நகராட்சியில், அனைத்து வார்டுகளில் வீட்டுவரி, சொத்துவரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும். வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us