Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை துவங்குகிறது

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை துவங்குகிறது

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை துவங்குகிறது

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை துவங்குகிறது

ADDED : செப் 04, 2025 04:55 AM


Google News
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய, 335ம் ஆண்டு பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இது குறித்து ஆலயத்தின் பங்குதந்தை அருள்தாஸ், கூறுகையில், 'ஆலயத்தின், 335ம் ஆண்டு, பெருவிழா நாளை (5ம் தேதி ) காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஆலயத்தில் தினமும் திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 14ம் தேதி, காலை பெருவிழா திருப்பலி, மாலை 5:30 மணியளவில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. சிறப்பு விருந்தினராக, சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன், தேர்பவனியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, 15ம் தேதி, காலை 9:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படுகிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us