ADDED : அக் 04, 2025 06:47 AM
அரியாங்குப்பம் : ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில், தவளக்குப்பத்தில், கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் சந்திப்பில், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமையில், நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, கட்சி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


