ADDED : பிப் 26, 2024 04:54 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலம் அருகே ஒருவர் ஆபாசமாக திட்டி, பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கடலுார் அடுத்த நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, 46; என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சக்ரபாணியை கைது செய்தனர்.


