ADDED : ஜூன் 12, 2025 05:08 AM
புதுச்சேரி : பொது இடத்தில் போதையில் ரகளையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை, போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முத்தியால்பேட்டை, சின்னையாபுரம் சந்திப்பில் ஒருவர் மது போதையில் அவ்வழியே சென்ற பொது மக்களுக்கு இடையூறாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் அநாகரிகமாக பேசிக் கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கஜேந்திரன், 45,என, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.