/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எரியாத ஹைமாஸ் விளக்குகள் இருளில் மூழ்கி கிடக்கும் சாலை எரியாத ஹைமாஸ் விளக்குகள் இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
எரியாத ஹைமாஸ் விளக்குகள் இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
எரியாத ஹைமாஸ் விளக்குகள் இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
எரியாத ஹைமாஸ் விளக்குகள் இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
UPDATED : ஜூன் 15, 2025 08:34 AM
ADDED : ஜூன் 15, 2025 06:48 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை விமான நிலையம் செல்லும் சாலையில், அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
லாஸ்பேட்டை விமான நிலைய சாலை போக்குவரத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் இருசக்கர வாகனம், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் லாஸ்பேட்டையில் அரசு பள்ளி, கல்லுாரி, பெண்கள் பொறியியல் கல்லுாரி, சமுதாய பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகள் இயங்குவதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேடு மைதானத்திற்கு தினசரி காலை, மாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அரசு மூலம் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை.
குறிப்பாக அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி அருகில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி முழுதும் இரவில் இருண்டு கிடக்கிறது. இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைவதோடு, திக் திக் என அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, எரியமால் உள்ள ஹைமாஸ் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.