/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விடிய விடிய நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி நகரில் நள்ளிரவில் உச்சகட்ட பரபரப்புவிடிய விடிய நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி நகரில் நள்ளிரவில் உச்சகட்ட பரபரப்பு
விடிய விடிய நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி நகரில் நள்ளிரவில் உச்சகட்ட பரபரப்பு
விடிய விடிய நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி நகரில் நள்ளிரவில் உச்சகட்ட பரபரப்பு
விடிய விடிய நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி நகரில் நள்ளிரவில் உச்சகட்ட பரபரப்பு
ADDED : பிப் 02, 2024 03:41 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தலைமை செயலகம் உள்பட இரண்டு கட்டடங்களை தீவிரவாதிகள் சிறை பிடித்தது போன்று நடந்த ஒத்திகையால் பரபரப்பு நிலவியது.
இந்தியாவில் அதிகம் தேடப்படும் அழகிய நகராக புதுச்சேரி உள்ளது. ஆண்டிற்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரியில் நேற்று இரவு 11:00 மணியளவில் தேசிய பாதுகாப்பு படை திடீர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகம், அரவிந்தர் இண்டர்நேஷனல் சென்டர் இடங்களில் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை சிறைபிடிப்பது போல சித்தரித்து இந்த ஒத்திகை நடந்தது. இந்த இரண்டு கட்டடங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளே இருப்பவர்களை பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டால் எவ்வாறு அந்த தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது என, தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகத்தில் தீவிரவாதிகள் புகுந்ததுபோன்று சம்பவத்தினை சித்தரித்து இருந்தாலும், கவர்னர் மாளிகை, சட்டசபை உள்பட முக்கிய கட்டடங்களில் தீவிரவாதிகள் உள்ளே புகாமல் இருக்க பலத்த கமாண்டோ பாதுகாப்பும் போடப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டது,
எந்த அறிவிப்பும் இல்லாமல் விடிய விடிய அதிகாலை 6:00 மணி வரை நடந்த ஒத்திகையால் நகர பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பீச்சிற்கு வந்த பொதுமக்கள் பீதியுடன் அச்சமடைந்து அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் நடந்த அனுபவங்களை இன்று 2ம் தேதி காவல் துறை அதிகாரிகள் பகிர உள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா நகரமான புதுச்சேரியின் பாதுகாப்பிற்கான இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை கண்டு பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. இந்த ஒத்திகையின் மூலம் பொதுமக்கள் வெளியேற்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இணைக்கம், போலீசார், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இடையிலான தகவல் பரிமாற்றம் என, அனைத்து விஷயங்களையும் மறுஆய்வு செய்ய முடியும்' என்றனர்.


