/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும் : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும் : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும் : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும் : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும் : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
ADDED : செப் 29, 2025 03:03 AM
புதுச்சேரி: கரூர் கூட்ட நெரிசல் உயிர்பலி சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
காரைக்காலில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியதாவது:
கரூரில் நடைபெற்றது துயரமான சம்பவம். இது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. இந்த சம்பவம் நடக்காமல் இருக்க அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு தான் இதற்கு காரணம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற ஆர்.சி.பி அணியின் ஐ.பி.எல்., கொண்டாட்டத்தின் போது இரண்டரை லட்சத்திற்கும் மேல் மக்கள் வந்தனர், அது போன்ற ஒரு கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 11 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் கரூரில் 27 ஆயிரம் பேர் வந்ததற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடந்துள்ளது.
கரூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், போலீசார் தடியடி நடத்தியதாகவும் சொல்கிறார்கள், மக்களுடைய நலன் மற்றும் உயிரை காப்பதற்கே பொது சேவைக்கு வருகின்றோம், ஆனால் அரசியல் நோக்கத்திற்காக இது போன்ற தவறான விஷயங்களை செய்யக்கூடாது. அதனை கண்டிக்கின்றேன்.
தமிழக அரசு இது போன்ற விஷயங்கள் நடந்து முடிந்த பிறகு அதனை ஆராய்வதை விட, நடப்பதற்கு முன் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வாரம் தோறும் மக்களை சந்தித்து வருகிறார், அவருக்கு அதிகபடியான கூட்டம் வருகிறது என காவல்துறைக்கு தெரியும். அப்படி தெரிய வந்த பிறகு கூட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறை தவறிவிட்டது. இதனை சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும்.
இந்த உயிரிழப்புகள் என்பது யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் என்றாலும், இதில் உள்ள உண்மை தன்மைகளை ஊடகங்கள் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.,கூட்டங்களை நடத்தும்போது முறையாக திட்டமிடலோடு நடத்துகிறார்கள். ஆனால் புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த எல்லா வேலையும் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


