ADDED : பிப் 06, 2024 04:22 AM
அரியாங்குப்பம், : தனியார் பஸ்கள் இடையே ஏற்பட்ட டைமிங் தகராறில் பஸ் கண்ணாடியை உடைத்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கடலுாருக்கு நேற்று மதியம் இரண்டு தனியார் பஸ்கள் புறப்பட்டது. தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனை பஸ் நிறுத்ததில் நேற்று மதியம் 12:30 மணிக்கு இரு பஸ்களின் டிரைவர்களும் பஸ்சை விட்டு கீழே இறங்கி தகராறில் ஈடுபட்டனர்.
அதில், ஆத்திரமடைந்த ஒரு தனியார் பஸ்சில் இருந்த ஊழியர் மற்றொரு பஸ் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தார்.
இது குறித்து, தவளக்குப்பம் போலீசார் இரு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


