/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபான கடைகள் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் மதுபான கடைகள் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மதுபான கடைகள் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மதுபான கடைகள் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மதுபான கடைகள் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : மே 11, 2025 11:33 PM
புதுச்சேரி: சித்திரை முழு நிலவு மாநாட்டை முன்னிட்டு, புதுச்சேரியில் நேற்று மதியம் அனைத்து மதுகடைகளும் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்தனர்.
புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால், வார இறுதி நாட்களில் வெளி மாநிலம் மற்றும் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரியில் கிடைக்கும் விதவிதமாக மதுபானங்களுக்காகவே சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் வருகின்றனர்.
இந்நிலையில், வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு மாநாட்டினை முன்னிட்டு அசம்பாவிதத்தை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் புதுச்சேரியில் உள்ள சாராயம், கள்ளு, மதுபானக் கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் மதுபானம் வழங்கும் விடுதி ஆகிய அனைத்தும் நேற்று மதியம் 1:00 மணி முதல் கலால் துறை உத்தரவின் பேரில் மூடப்பட்டது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால், புதுச்சேரி முழுதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால், மதியத்திற்கு மேல் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் மதுபானங்கள் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.