ADDED : செப் 14, 2025 11:12 PM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்றனர்.


