ADDED : அக் 13, 2025 12:54 AM

புதுச்சேரி; புதுச்சேரி எழுத்தாளர்கள் - நட்புக்குயில்கள் சார்பில் மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
உருளையன்பேட்டையில் உள்ள தோழமைக்கூடல் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மறைந்த எழுத்தாளர் ரமேஷ்பிரேதன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இலக்கிய விமர்சகர், பேராசிரியர் பஞ்சங்கம் தலைமை தாங்கி புகழ் வணக்க உரையாற்றினார். எழுத்தாளர்கள் ரவிக்குமார், பாண்டியன், இளவெனில், விசாகன், ஜீவகரிகாலன், தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


