Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ த.வெ.க., நலத்திட்ட உதவிகள்

த.வெ.க., நலத்திட்ட உதவிகள்

த.வெ.க., நலத்திட்ட உதவிகள்

த.வெ.க., நலத்திட்ட உதவிகள்

த.வெ.க., நலத்திட்ட உதவிகள்

ADDED : பிப் 09, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதி த.வெ.க., சார்பில் வம்பாக்கீரப்பாளையத்தில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு தொகுதி நிர்வாகி மதன் தலைமை தாங்கினார். சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் நிரேஷ்குமார், புதுச்சேரி மாநில நிர்வாகி புதியவன், உப்பளம் தொகுதி நிர்வாகி சிவா முன்னிலை வகித்தனர். த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

100 பெண்களுக்கு புடவை, 125 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, 100 பேருக்கு தலா 1 கிலோ சர்க்கரை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகி அரியங்குப்பம் வசந்த், அணி நிர்வாகி உப்பளம் பேட்ரிக், உப்பளம் தொகுதி நிர்வாகிகள் மகிமை, ஆனந்து, ராஜா, ஐயப்பன், பிரகாஷ், அருண், சந்தானம் வினாயகம், அருள், மகேந்திரன், பிரபாகரன், கேசவன், கோபிநாத், சரத்குமார், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.