புதுச்சேரியில் இரு நாள் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது
புதுச்சேரியில் இரு நாள் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது
புதுச்சேரியில் இரு நாள் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது
புதுச்சேரியில் இரு நாள் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது

அசத்தல் அரங்குகள்
வழிகாட்டி நிகழ்ச்சியின் கண்காட்சி ஸ்டால்களை கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் பென்ரூபன், கோவை எஸ்.என்.ஆர்., மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கல்வியாளர்களுடன் அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
மாணவர்கள் ஆர்வம்
வழிகாட்டி நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காலை 8.30 மணி முதல், ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ஸ்டால்களாக சென்று பார்வையிட்டனர். ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கின்றன. அங்குள்ள வசதிகள், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அலைச்சலின்றி தெரிந்து தெளிவு பெற்றனர்.
கருத்தரங்கம்
வழிகாட்டி நிகழ்ச்சியில் தொடர்ந்து முற்பகல் மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளிலும் கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. காலை 10 மணி முதல் 12.30 மணிரை நடந்த முதல் அமர்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் பென்ரூபன், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றியும், மத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பிலும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவன ஆடிட்டர் சந்தியா எதிர்கால சி.ஏ., வணிகவியல் படிப்புகளில் வாய்ப்புகள் குறித்தும், கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி பேராசிரியர் ஆனந்தகுமார், புதிய தொழில்நுட்ப படிப்புகள் குறித்து பேசினர்.
சென்டாக் கவுன்சிலிங்
மாலை 3 மணிக்கு துவங்கிய இரண்டாம் அமர்வில் சென்டாக் படிப்புகள், அட்மிஷன் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சேரி இந்திரா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியரான சென்டாக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் யமுனாராணி, வில்லியனுார் கஸ்துார்பா மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியரான சென்டாக் குறை தீர்வு அதிகாரி விவேகானந்ததாசன் விளக்கம் அளித்தனர்.
கல்வியாளர்கள்
சென்னை சோகோ நிறுவன முதன்மை மனித வள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் வேலைவாய்ப்பு திறன்கள் பற்றியும், பிரபல கல்வியாளர் ரமேஷ்பிரபா உடனடி வேலை அளிக்கும் படிப்புகள் குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.
நிரம்பி வழிந்த அரங்குகள்
கல்வியாளர்களின் கருத்துகளை கேட்க பெற்றோர், மாணவர்கள் கூடியதால் நேற்று அரங்கு நிரம்பி வழிந்தது. மாணவர்கள், கல்வியாளர்கள் வழங்கிய குறிப்புகளை எழுதிக்கொண்டதுடன், தங்களுடைய மொபைல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். வெளியூர் சென்றுள்ள மாணவர்களுக்கு பதிலாக அவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். கல்வியாளர்கள் வழங்கிய கருத்துகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து சிலர் நேரடியாகவும் கல்வியாளர்களை அணுகி சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று திருப்தியடைந்தனர். அத்துடன் உயர் கல்வி தொடர்பான ஸ்டால்களை பார்வையிட்டு. அட்மிஷன் தகவல்களையும் பெற்றனர்.
பொது அறிவு போட்டி
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, சரியான விடை எழுதியவர்களுக்கு, லேப்டாப், வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டன. ஆர்வமாக பங்கேற்ற மாணவ மாணவிகள் அசத்தலாக பதிலளித்து ஒரு லேப்டாப், 2 டேப்லெட்,10 வாட்சுகள் என 13 பரிசுகளை தட்டி சென்றனர்.
நுழைவு தேர்வு
நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது. அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்.சி., - ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ.,-ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பி தெளிவு பெறலாம்.


