ADDED : செப் 10, 2025 11:28 PM
காரைக்கால்: காரைக்கால் கடலில் விழுந்து இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், நிரவி, கருக்களாச்சேரி கடற்கரையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் நேற்று கரை ஒதுங்கி இருந்தது. இது குறித்து நிரவி வி.ஏ.ஓ., மதியழகன் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.