வாஸ்கோ நிறுவனம் சார்பில் இறைவி விருது வழங்கும் விழா
வாஸ்கோ நிறுவனம் சார்பில் இறைவி விருது வழங்கும் விழா
ADDED : மார் 15, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வாஸ்கோ நிறுவனம் சார்பில், மகளிர் தினம் மற்றும் 3ம் ஆண்டிற்கான இறைவி விருது வழங்கும் விழா, கடலுார் சாலை, புரொவிடன்ஸ் மாலில் நேற்று நடந்தது.
வாஸ்கோ நிறுவன இயக்குனர் ஆனந்த் தலைமை தாங்கினார். வாஸ்கோ நிறுவன தலைமை அதிகாரி சண்முகம் வரவேற்றார்.
வித்யா ராம்குமார், சீனியர் எஸ்.பி., நித்யா, அனிதா, ஜாக்குலின் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக நடிகை ரேவதி, பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு இறைவி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து, இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள், பொதுமக்கள், வாஸ்கோ நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாஸ்கோ நிறுவன தொகுப்பாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.
