/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரிக்கு இன்று துணை ஜனாதிபதி வருகை ஏர்போர்ட் சாலையில் 2 நாள் வாகனங்கள் செல்ல தடைபுதுச்சேரிக்கு இன்று துணை ஜனாதிபதி வருகை ஏர்போர்ட் சாலையில் 2 நாள் வாகனங்கள் செல்ல தடை
புதுச்சேரிக்கு இன்று துணை ஜனாதிபதி வருகை ஏர்போர்ட் சாலையில் 2 நாள் வாகனங்கள் செல்ல தடை
புதுச்சேரிக்கு இன்று துணை ஜனாதிபதி வருகை ஏர்போர்ட் சாலையில் 2 நாள் வாகனங்கள் செல்ல தடை
புதுச்சேரிக்கு இன்று துணை ஜனாதிபதி வருகை ஏர்போர்ட் சாலையில் 2 நாள் வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜன 28, 2024 04:41 AM

புதுச்சேரி : இன்று துணை ஜனாதிபதி வருகையையொட்டி ஏர்போர்ட் சாலையில் வாகனங்கள் செல்ல போலீசார் இரண்டு நாள் தடை விதித்துள்ளனர்.
போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார். பின், சாலை மார்க்கமாக காலாப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 'வளர்ந்த பாரதம்' 2047 என்ற தலைப்பில் நடக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்பு கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மறுநாள் 29 ம் தேதி சாலை மார்க்கமாக புதுச்சேரி விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் சிதம்பரம் செல்கிறார்.
இதனையொட்டி, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை கருத்தில் கொண்டு சாலைகளை பயன்படுத்தாமல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
துணை ஜனாதிபதி கார்கேட் செல்லும் நேரத்தில் சம்பந்தப்பட்ட சாலைகளில் வாகனம் செல்ல அனுமதிக்கப்படாது.
இன்று 28 மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், 29 ம் தேதி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையில் ஏர்போர்ட் சாலையில் இருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் பஸ், ரூட் பஸ்கள் மற்றும் பள்ளி பஸ்கள் உட்பட செல்ல அனுமதி கிடையாது.
இன்று மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அனைத்து கனரக வாகனங்கள், ரூட் பஸ்கள் உட்பட அனைத்தும் தமிழக பகுதியான புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் சந்திப்பு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
நீதித்துறை விருந்தினர் விடுதி அருகே புஸ்சி வீதியில் செஞ்சி சாலை சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை சந்திப்பு வரை அதனை ஒட்டியுள்ள சாலைகளில் எந்தவித வாகனங்கள் இயக்கவும் மற்றும் நிறுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி செல்லும் சாலை மற்றும் விழா நடக்கும் இடத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஒயிட் டவுன் பகுதியில் கடற்கரை சாலை, துய்மா வீதி, செயின்ட் லுாயீஸ் வீதி, புஸ்சி வீதியில் ஆம்பூர் சாலை முதல் கடற்கரை சாலை வரையிலும், நேரு வீதியில் ஆம்பூர் சாலை முதல் செயின்ட் லுாயீஸ் வீதி வரையிலும், மணக்குள விநாயகர் கோவில் வீதியில் ரங்கப்பிள்ளை வீதி முதல் துப்புய் வீதி வரை, பிரான்சுவா மார்த்தேன் வீதியில் ரங்கப்பிள்ளை வீதி முதல் துப்புய் வீதி வரை உள்ள சாலைகள் வாகனங்கள் இல்லா பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
துணை ஜனாதிபதி வருகையையொட்டி, பல்கலைக்கழகத்திற்கு செல்லும் இ.சி.ஆர்., பகுதியில் உள்ள மணல் குவியலை அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.