/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்

மக்களின் சிரமத்தை குறைக்க
விஜய் பறந்து வரலாமே...
புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை பனையூரில் இருந்து த.வெ.க., தலைவர் விஜய் தனது பிரசார பஸ் அல்லது காரில் வந்தால் வழி எல்லாம் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக, குறுகிய வீதிகளை கொண்ட புதுச்சேரி நகரம் ஒட்டுமொத்தமாக முடங்கி விடும். காலாப்பட்டில் ஆரம்பித்து, புதுச்சேரி நகரம் வரை அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைவார்கள். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வரும் பஸ் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, ஜெயலலிதா பாணியில், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக விஜய் புதுச்சேரிக்கு வர வேண்டும். பொதுக்கூட்டம் முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றால், யாருக்கும் எந்த சிரமமும் ஏற்படாது. உப்பளம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு வசதியாக ஏற்கனவே ஹெலிபேடு அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


