/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிராம உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் தேர்வு கிராம உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் தேர்வு
கிராம உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் தேர்வு
கிராம உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் தேர்வு
கிராம உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் தேர்வு
ADDED : செப் 30, 2025 07:47 AM
புதுச்சேரி : கிராம உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து தலைமை செயலகம் உறுப்பினர் செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், மற்றும் பல் நோக்கு உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 12ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் 81 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in இணையதளத்தில் இன்று 30ம் தேதி மதியம் 12.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவிக்கு தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413--22333 38 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


