ADDED : செப் 30, 2025 08:09 AM
புதுச்சேரி : கடன் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 31; இவர் பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்தார். இந்நிலையில், கடனாக பணம் கொடுத்தவர், நெருக்கடி கொடுத்து, அவமானப்படுத்தினார் என அவரது மனைவியிடம் கூறி விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில், மணிகண்டன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


