Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., செல்வம் எம்.எல்.ஏ.,பாராட்டு

உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., செல்வம் எம்.எல்.ஏ.,பாராட்டு

உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., செல்வம் எம்.எல்.ஏ.,பாராட்டு

உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., செல்வம் எம்.எல்.ஏ.,பாராட்டு

ADDED : அக் 03, 2025 01:38 AM


Google News
புதுச்சேரி:உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., உள்ளது என, செல்வம் எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றைக்குபாரதத்தின் கவுரவம் உலக அளவில் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.,என் சித்தாந்த தாக்கம் முக்கிய காரணமாகும். ஒரு இயக்கம் தொடங்கி, 100 ஆண்டு காலமாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக உள்ளது. ஸ்வயம் சேவகர்களின் தியாக வாழ்வும் கடின உழைப்பும் மேலும் தெய்வத்தின் பரிபூரண அனுக்கிரகமும் காரணமாகும். அந்த வகையில் தேசப் பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்., பணி தெய்வப் பணியேயாகும்.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமானது, கடந்த 100 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் தளர்ந்து போகாமல் தடைக்கற்களை படிக்கற்களாக்கி வெற்றிகரமாக இன்று 100வது வருடத்தை அடைந்து உள்ளது.

சங்கத்தின் நுாற் றாண்டு விழா காலத்தில் நாமும் அதில் பங்கு கொள்வது பெரும் பாக்கியம். நல்ல மனிதனை உருவாக்கும் இயக்கமாக, நுாறாண்டுகளை கடந்த ஆர்.எஸ்.எஸ்.,க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியம் வலுப்பெற சங்கம் பல்லாண்டு பல்லாண்டு காலம் சிறப்பாக செயல்பட்டு, இம் மண்ணுலகம்உள்ளவரை, பாரதத்தின் புகழ் பரப்பி வாழ்வாங்கு வளர்ந்திட வாழ்த்துகள்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us