ADDED : அக் 08, 2025 08:08 AM
பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டி நபரை போலீசார் கைது செய்தனர்.
கரையாம்புத்துார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். மணமேடு மேம்பாலம் பகுதியில், ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், பண்ருட்டி அடுத்த எ. குச்சிப்பாளையத்தை சேர்ந்த அமர்நாத் 47; என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


