Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா


ADDED : ஏப் 27, 2026 11:23 PM

Follow on Google

ADDED : ஏப் 27, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹோர்சென்ஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 'ஏ' பிரிவு 2வது லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின்லக்சயா சென் 21-14, 21-16 என ஸ்டீபன் சாமை வென்றார். மற்றொரு போட்டியில் ஆயுஷ் ஷெட்டி, 21-8, 21-6 என ஷ்ரே தந்த்தை சாய்த்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-16 என நேர் செட் கணக்கில் ஹிதாயத், யு ஜே ஜோடியை வென்றது.

ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் பிரனாய், 21-11, 21-17 என ரிஷி பூபதியை வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி 21-12, 21-10 என, ரமதியன்ஷா, ஸ்டீபன் சாம் ஜோடியை சாய்த்தது.

முடிவில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கனடாவை வென்ற இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது. நாளை தனது 3வது, கடைசி போட்டியில் இந்தியா, சீனாவை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap