/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல் சதம் விளாசல்தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல் சதம் விளாசல்
தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல் சதம் விளாசல்
தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல் சதம் விளாசல்
தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல் சதம் விளாசல்
ADDED : பிப் 11, 2024 06:50 PM

அடிலெய்டு: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் மேக்ஸ்வெல் சதம் விளாச ஆஸ்திரேலிய அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. அடிலெய்டில் இரண்டாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு ஜோஷ் இங்லிஸ் (4) ஏமாற்றினார். வார்னர் (22), கேப்டன் மிட்சல் மார்ஷ் (29), ஸ்டாய்னிஸ் (16) நிலைக்கவில்லை. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய மேக்ஸ்வெல், 50 பந்தில் சதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன் குவித்தது. மேக்ஸ்வெல் (120 ரன், 55 பந்து, 8 சிக்சர், 12 பவுண்டரி), டிம் டேவிட் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 207 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் ராவ்மன் பாவெல் (63) கைகொடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட் சாய்த்தார்.