/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கனவு அணியில் சஹாரன் * ஜூனியர் 'உலக' தொடரின்...கனவு அணியில் சஹாரன் * ஜூனியர் 'உலக' தொடரின்...
கனவு அணியில் சஹாரன் * ஜூனியர் 'உலக' தொடரின்...
கனவு அணியில் சஹாரன் * ஜூனியர் 'உலக' தொடரின்...
கனவு அணியில் சஹாரன் * ஜூனியர் 'உலக' தொடரின்...
ADDED : பிப் 12, 2024 10:58 PM

பெனோனி: 'ஜூனியர்' உலக கோப்பை தொடருக்கான ஐ.சி.சி., கனவு அணியில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றனர்.
தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடந்தது. பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை இழந்தது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 'கனவு' அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) வெளியிட்டது.
அதிக ரன் குவித்து முதலிடம் பெற்ற இந்திய அணி கேப்டன் சஹாரன் (397), 2வது இடம் பெற்ற முஷீர் கான் (360), சச்சின் தாஸ் (303), அதிக விக்கெட் சாய்த்தவர்களில் இரண்டாவது இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் சவுமி பாண்டே (18) என நான்கு இந்திய வீரர்கள் இதில் இடம் பெற்றனர். கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஹக் வெய்ப்கென் தேர்வானார்.
* அணி விபரம் (பேட்டிங் வரிசையில்):
பிரிட்டோரியஸ் (தெ.ஆப்.,), ஹாரி டிக்சன் (ஆஸி.,), முஷீர் கான், வெய்ப்கென், சஹாரன், சச்சின் தாஸ், எட்வர்டு (வெ. இண்டீஸ்), வில்டர் (ஆஸி.,), உபெய்டு ஷா (பாக்.,), மபகா (தெ.ஆப்.,), சவுமி பாண்டே, ஜமைன் டங்க் (ஸ்காட்லாந்து).