/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்: 'எஸ்.ஏ.20' தொடரில் அபாரம்ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்: 'எஸ்.ஏ.20' தொடரில் அபாரம்
ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்: 'எஸ்.ஏ.20' தொடரில் அபாரம்
ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்: 'எஸ்.ஏ.20' தொடரில் அபாரம்
ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்: 'எஸ்.ஏ.20' தொடரில் அபாரம்
ADDED : பிப் 11, 2024 06:48 PM

கேப்டவுன்: 'எஸ்.ஏ.20' தொடரில் ஈஸ்டர்ன் கேப் அணி மீண்டும் கோப்பை வென்றது. பைனலில் 89 ரன் வித்தியாசத்தில் டர்பன் அணியை வென்றது.
தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. கேப்டவுனில் நடந்த பைனலில் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டர்ன் கேப் அணி, கேஷவ் மஹாராஜ் வழிநடத்திய டர்பன் அணியை சந்தித்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டேவிட் மலான் (6) ஏமாற்றினார். ஜோர்டான் ஹெர்மன் (42) நல்ல துவக்கம் தந்தார். டாம் அபெல் (55 ரன், 2 சிக்சர், 8 பவுண்டரி) அரைசதம் விளாசினார். கேப்டன் மார்க்ரம் (42*), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (56* ரன், 3 சிக்சர், 5 பவுண்டரி) கைகொடுத்தனர். ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன் குவித்தது.
சவாலான இலக்கை விரட்டிய டர்பன் அணி 17 ஓவரில் 115 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வியான் முல்டர் (38), டுவைன் பிரிட்டோரியஸ் (28) ஆறுதல் தந்தனர். ஈஸ்டர்ன் கேப் சார்பில் மார்கோ ஜான்சன் 5 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை டாம் அபெல் (ஈஸ்டர்ன் கேப்) வென்றார். தொடர் நாயகன் விருதை ஹெய்ன்ரிச் கிளாசன் (டர்பன்) கைப்பற்றினார்.