Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா 'ஏ' முன்னிலை

இந்தியா 'ஏ' முன்னிலை

இந்தியா 'ஏ' முன்னிலை

இந்தியா 'ஏ' முன்னிலை

ADDED : பிப் 02, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 'ஏ' 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்தியா 'ஏ' முதல் இன்னிங்சில் 192 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 98/1 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 199 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அலெக்ஸ் லீஸ் (64) ஆறுதல் தந்தார். இந்தியா 'ஏ' சார்பில் ஆகாஷ் தீப் 4, யாஷ் தயால் 3, ஷாம்ஸ் முலானி 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (22), தேவ்தத் படிக்கல் (21) சோபிக்கவில்லை. சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார். திலக் வர்மா (46) கைகொடுத்தார்.

ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 148/3 ரன் எடுத்து, 141 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுதர்சன் (54) அவுட்டாகாமல் இருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us