Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அரையிறுதியில் இளம் இந்தியா * ஜூனியர் உலக தொடரில் கலக்கல்

அரையிறுதியில் இளம் இந்தியா * ஜூனியர் உலக தொடரில் கலக்கல்

அரையிறுதியில் இளம் இந்தியா * ஜூனியர் உலக தொடரில் கலக்கல்

அரையிறுதியில் இளம் இந்தியா * ஜூனியர் உலக தொடரில் கலக்கல்

ADDED : பிப் 02, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
புளோம்போன்டீன்: ஜூனியர் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இளம் இந்திய அணி முன்னேறியது.

தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடக்கிறது. 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'சூப்பர்-6' சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

பிரிவு 1ல் இடம் பெற்ற இந்திய அணி, நேற்று தனது கடைசி போட்டியில் நேபாளத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஆதர்ஷ் (21), அர்ஷின் (18) ஜோடி சுமார் துவக்கம் தர, பிரியான்ஷு 19 ரன் எடுத்தார். கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ் இணைந்தனர். இருவரும் சதம் விளாசினர். சச்சின் 116, சஹாரன் 100 ரன்னில் அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவரில் 297/5 ரன் எடுத்தது. முஷீர் கான் (9), ஆரவெல்லி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் களமிறங்கிய நேபாள அணி 50 ஓவரில் 165/9 ரன் மட்டும் எடுத்தது. 132 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா, 8 புள்ளியுடன், பட்டியலில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us