Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை: ரச்சின், லதாம் சதம் விளாசல்

நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை: ரச்சின், லதாம் சதம் விளாசல்

நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை: ரச்சின், லதாம் சதம் விளாசல்

நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை: ரச்சின், லதாம் சதம் விளாசல்

Latest Tamil News
கிறைஸ்ட்சர்ச்: கேப்டன் டாம் லதாம், ரச்சின் ரவிந்திரா சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 231, வெஸ்ட் இண்டீஸ் 167 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 32/0 ரன் எடுத்திருந்தது. லதாம் (14), கான்வே (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் கான்வே (37), கேன் வில்லியம்சன் (9) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் டாம் லதாம், ரச்சின் ரவிந்திரா சதம் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 279 ரன் சேர்த்த போது கீமர் ரோச் 'வேகத்தில்' லதாம் (145 ரன், 12x4) வெளியேறினார். அபாரமாக ஆடிய ரச்சின், 176 ரன்னில் (1x6, 27x4) ஆட்டமிழந்தார்.

ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 414/4 ரன் எடுத்து, 481 ரன் முன்னிலை பெற்றிருந்தது. வில் யங் (21), மைக்கேல் பிரேஸ்வெல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பீல் ரோச், ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us