/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழக அணிக்கு கடின இலக்கு: ரஞ்சி கோப்பையில்தமிழக அணிக்கு கடின இலக்கு: ரஞ்சி கோப்பையில்
தமிழக அணிக்கு கடின இலக்கு: ரஞ்சி கோப்பையில்
தமிழக அணிக்கு கடின இலக்கு: ரஞ்சி கோப்பையில்
தமிழக அணிக்கு கடின இலக்கு: ரஞ்சி கோப்பையில்
ADDED : பிப் 11, 2024 07:06 PM

சென்னை: கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணியின் வெற்றிக்கு 355 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல் தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 366 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 129/7 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் (48) ஓரளவு கைகொடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய கர்நாடகா அணி 139 ரன்னுக்கு சுருண்டது. தேவ்தத் படிக்கல் (36) ஆறுதல் தந்தார். தமிழகம் சார்பில் அஜித் ராம் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி ஆட்டநேர முடிவில் 36/1 ரன் எடுத்திருந்தது. விமல் (16), பிரதோஷ் ரஞ்சன் பால் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடைசி நாளில் தமிழக பேட்டர்கள் சுதாரித்துக் கொண்டால் தோல்வியை தவிர்க்கலாம்.