/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
ADDED : பிப் 02, 2024 08:53 PM

வால்வர்ஹாம்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-3 என வால்வர்ஹாம்டன் அணியை வென்றது.
இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீக் கால்பந்து 32வது சீசன் நடக்கிறது. வால்வர்ஹாம்டனில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், வால்வர்ஹாம்டன் வாண்டரர்ஸ் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்த அணி சார்பில் மார்கஸ் ரூதர்போர்டு (5வது நிமிடம்), ராஸ்மஸ் (22வது), ஸ்காட் மெக்டோமினே (75வது), கொபி மைனுா (90+7வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
லண்டனில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் வெஸ்ட் ஹாம் யுனைடெட், போர்ன்மவுத் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது.
இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் லிவர்பூல் (51 புள்ளி), மான்செஸ்டர் சிட்டி (46), ஆர்சனல் (46), டாட்டென்ஹாம் ஹாட்ஸ்பர் (43) அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மான்செஸ்டர் யுனைடெட் அணி (35 புள்ளி) 7வது இடத்தில் உள்ளது.


