Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: அர்ஜுன், அரவிந்த் 'டிரா' * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில்...

செஸ்: அர்ஜுன், அரவிந்த் 'டிரா' * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில்...

செஸ்: அர்ஜுன், அரவிந்த் 'டிரா' * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில்...


ADDED : நவ 06, 2024 10:58 PM

Follow on Google

ADDED : நவ 06, 2024 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், 'டிரா' செய்தார்.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கிறது. இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 8 பேர், இதில் பங்கேற்கின்றனர்.

நேற்று, இரண்டாவது சுற்று நடந்தன. அர்ஜுன், ஆரோனியனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் அர்ஜுன் விளையாடினார். 27 வது நகர்த்தலில் முன்னேறினார் அர்ஜுன். பின் போட்டி சமநிலைக்கு சென்றது. கடைசியில் 36வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

அரவிந்த் சிதம்பரம், மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) மோதிய போட்டி 'டிரா' ஆனது. இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, ஈரானின் பர்ஹாமிடம் தோல்வியடைந்தார்.

இரண்டு சுற்று முடிவில் வாசியர் (1.5), ஈரானின் அமின் (1.5), அர்ஜுன் (1.5) முதல் 3 இடத்தில் உள்ளனர். அரவிந்த் (1.0) 4வதாக உள்ளார்.

வைஷாலி 'டிரா'

சாலஞ்சர் பிரிவில் நேற்று 2வது சுற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சக வீரர் ரவுனக்கை சந்தித்தார். இப்போட்டி 30 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் லியான் மென்டன்காவிடம், ஹரிகா தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் பிரனவ், அபிமன்யுவை வென்றார். 2 சுற்று முடிவில் பிரனவ் (2.0), லியான் (2.0), ரவுனக் (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap